Galileo Galilei - கலீலியோ கலிலி

CartoonTamilan

 "ஆறறிவு, உணர்ச்சிகள்,  பகுத்தறிதல் ஆகியனவற்றை மனிதர்களுக்குக் கொடுத்த இறைவனே அதை மனிதன் பயன்படுத்தக்கூடாது என்று சொல்கிறார் என்பதை என்னால் ஏற்றுக்கொள்ள இயலாது". என்ற வசனம் சுமார் 500 வருடங்களுக்கு முன்னர் உதிர்க்கப்பட்டது. எட்டு கோள்களில் ஒன்றுதான் உலகம் நாம் வாழும் பூமி எனபதும், நிலாவானது நமது பூவியை சுற்றுகிறது என்பதும், பூவி சூரியனை சுற்றி தானும் சுழல்கிறது என்பதும் இன்று நாமறிந்த உண்மை. ஆனால், ஐநூறு வருடங்களுக்கு முன்னர்வரை சூரியனும் நிலவும் பூமியை மையமாக கொண்டு சுழல்கிறது என்று இந்த உலகம் எண்ணிக்கொண்டிருந்தது.அதை தவறு என்றும், சூரியனை மையமாக வைத்துதான் அனைத்து கோள்களும் சுழல்கின்றது என்ற மெய்யை தைரியமாக சொன்ன கொடுமைக்காக சொல்ல முடியாத துன்பங்களை அனுபவித்த ஒருவரை பற்றிதான் நாம் தெரிந்துகொள்ள போகிறோம். பிரபஞ்சத்தின் உண்மையான அமைப்பு என்ன என்பதை முதன்முதலில் தெரிந்து இவ்வுலகிற்கு கூறிய வானியல் விஞ்ஞானி கலிலியோ கலிலி (Galileo Galilei).



1564-ம் வருடம் பிப்ரவரி மாதம் 15-ம் தேதி இத்தாலியிலுள்ள Pisa என்னும் நகரில் உதிர்த்தார் கலிலி. 6 குழந்தைகளில் மூத்தவர் அவர்தான். அவரின் குடும்பம் சமூகத்தில் உயர்ந்த அந்தஸ்து பெற்றது. இருப்பினும் அவரின் குடும்பம் பணக்கார குடும்பமல்ல. சிறுவயதிலிருந்தே மிகுந்த அறிவுக்கூர்மையுடனும், ஆழமாக சிந்திக்கும் திறனுடனும் காணப்பட்டார் கலிலி.அவர் தனது 17 - வது வயதின்போது பிசா (University of Pisa) பல்கலைக்கழகத்தில் இணைந்து கணிதமும், இயற்பியலும் கற்றறிந்தார்.அச்சமயத்தில் அந்தப் பல்கலைக்கழகத்தில் அதிகமான கேள்விகளை கேட்ட மாணவர் இவர்தான்.ஆசிரியரால் கற்பிக்கப்பட்ட அனைத்து அறிவியல் கருத்துகளையும் இதர மாணவர்கள் கற்பித்தபடியே ஏற்றுக்கொள்ள,கலிலி மட்டும் அதற்கு என்ன ஆதாரம் என்று கேட்பார். உதாரணமாக இருவிதமான எடை கொண்ட இரு பொருட்களை உயரத்திலிருந்து தரையை நோக்கி கீழே போடும்போது அதிகமான எடையுடைய பொருளானது முதலிலும் மற்றும் குறைந்த எடையுடைய பொருள் பின்னருமாக தரையை வந்தடையும் என்று கற்பிக்கப்பட்டது.அதற்க்கு அவர் அதற்க்கு ஆதாரத்தை கேட்டார்.ஆசிரியர் இரண்டு வித்தியாசமான எடையுடைய பொருளை கொண்டுவந்து கீழே போட்டு காட்டி அவரது சந்தேகத்தை நிவர்த்தி செய்தனர். 



அரிஸ்டாட்டில் கூறியிருந்த அக்கருத்தை அப்படியே கற்பித்து வந்தது பல்கலைக்கழகங்கள் ஆனால், விஞ்ஞானம் ஒன்றை ஏற்று கொள்ள வேண்டுமென்றால் அது நிருபிக்க பட்டிருக்க வேண்டுமென்று நம்பிய கலிலியோ அரிஸ்டாட்டில் கூறிய கருத்துக்களை ஏற்றுக்கொள்ள மறுத்தார். அதன் விளைவாக ஆசிரியர்களின் கோபத்திற்கு உள்ளானார் கலிலியோ.பட்டம் பெற்ற பின் தனது 25-வது வயதில் தான் பயின்ற அதே பல்கலைக்கழகத்தில் கணிதவியல் பேராசிரியராக பணியில் சேர்ந்தார்.ஒரு மாணவனாக இருந்தபொழுது அவரால் செய்ய இயலாததை ஆசிரியராக இருந்து செய்யலாம் என்று முடிவுசெய்த கலிலியோ அரிஸ்டாட்டிலினது கூற்று தவறு என்று உணர்த்த நினைத்தார். பல பார்வையாளர்களை அழைத்து பிசாவின் சாய்ந்த கோபுரத்தின் உச்சியின் மீது ஏறி நின்று இரண்டு வித்தியாசமான எடையுடைய இரு உலோக குண்டுகளை ஒரே நேரத்தில் தரையை நோக்கி கீழே போட சொன்னார்.அவர் எத்தனை முறைசெய்தாலும் இரு குண்டுகளும் ஒரே நேரத்தில் சமமாக தரையை வந்தடைந்தன. ஓரு எளிய அறிவியலின் உண்மையை தன் கண்ணால் கண்டபோதும்அங்கிருந்தவர்கள் என்ன கூறினார்கள் தெரியுமா? அதில் சூழ்ச்சி இருக்கிறது எனவும், இது இயற்கையின் விதிக்கு எதிரானது எனவும் சொல்லி அதை ஏற்க்க மறுத்தார்கள் கலிலியோவை மந்திரக்காரன் என்று கூறி எதிர்த்தனர். அதன்பின் கலிலியோவினால் பிசா பல்கலைகழகத்தில் தொடர்ந்து தனது ஆசிரியர் பணியை ஆற்ற இயலவில்லை.பிறகு  University of Padua என்ற பல்கலைக்கழகத்தில் ஆசிரியர் பணியில் சேர்ந்தார். வானியல் ஆய்வின் மீது அதிகப்படியான ஆர்வம் கொண்டிருந்தார், கலிலியோ.இதன் விளைவாக 1609-ம் ஆண்டில் telescope என்றழைக்கப்படும் உலகின் முதல் தொலைநோக்கி உருவானது.பின்னர் அதன்மூலம் தினமும் பிரபஞ்சத்தை ஆய்வு செய்யத் தொடங்கினார். அதன் விளைவாக பிரபஞ்சத்தில் அதிசியம் நிறைந்த பல கண்டுபிடிப்புகளைக் கண்டறிந்தார்.முதன்முதலாக சனி கிரகத்தை சுற்றிலும் வளையம் இருப்பதைக் கண்டுபிடித்தார்.பின்பு வியாழன் கோளை நான்கு கோள்கள் சுற்றி வருகின்றன.வியாழன் கோளுக்கு நான்கு நிலாக்கள் இருக்கிறது என்று கண்டறிந்தார். 



சூரியனில் காணப்படும் கரும்புள்ளிகளையும் கலிலியோ கண்டறிந்தார். அக்கரும்புள்ளிகள் என்ன என்று சிந்தித்தார்...பின்னர் அது சூரியனை சுற்றி வலம்வரும் கோள்களாகத்தான் இருக்க வேண்டுமென்று நினைத்தார்.சூரியனை சுற்றிதான் அனைத்து கோள்களும் சுழல்கின்றது என்னும் தமது கருத்தை அதன்மூலமாக உறுதி செய்து கொண்டார் கலிலியோ. அது Copernicus தான் அறிந்து சொன்ன கருத்துதாக இருந்தாலும் அதற்குறிய ஆதாரத்தை கண்டறிந்து கூறியவர் கலிலியோ. அக்கருத்தை சில மக்கள் ஏற்றாலும், கேள்வி கேட்பது மாபெரும்தவறு என்ற உயரிய எண்ணத்துடன் வாழ்ந்த பல பழமைவாதிகள் அதற்குப் பல்வேறு எதிர்ப்புகளைத் தெரிவித்தார்கள். அது பைபிளிலுள்ள கருத்திற்க்கு நேர்மறையானது எனக் கூறி கிறிஸ்துவ சமூகம் கலிலியோவுக்கு எதிர்ப்பு தெரிவித்தது. கலிலியோ இறைவன் இல்லை என்று மறுப்பவர் என்றும், மந்திரக்காரன் என்றும் பல பட்டங்களைக் கட்டியது ரோமன் கத்தோலிக்க தேவாலயம்.  அக்காலகட்டத்தில் சர்வ வல்லமை கொண்டிருந்தன தேவாலாயங்கள். நாட்டை ஆளும் அரசனையும் ஆளும் வல்லமை தேவாலாயங்களுக்கு தான் இருந்தது. 1615-ம் ஆண்டில் கலிலியோ ஒரு புத்தகத்தை வெளியிட்டார். அதில்,தனது கண்டுபிடிப்புகளையும், சூரியனை மையமாக வைத்துதான் பூமி மற்றும் பல கோள்கள் சூரியனை சுற்றுகிறது என்ற தனது கருத்தையும் கூறியிருந்தார்.அதன் விளைவாக தேவாலய அதிகாரிகள் அவர் புனித தேவாலயத்திற்கு எதிராக செயல்பட்டார் என்று கூறி அவரை கைது செய்தனர்.தனது கருத்துகள் தவறானது என்று ஏற்றுக்கொள்ள கலிலியோ துன்புறுத்தப்பட்டார் தனது உயிருக்கு ஆபத்து என்று உணர்ந்த கலிலியோ வேறு வழியின்றி தனது கூற்று தவறானது என்று ஏற்றுக்கொண்டார். பின்பு பிரான்ஸுக்கு குடிபெயர்ந்தார் கலிலியோ.அங்கு தொடர்ந்து பல ஆராய்ச்சிகளை மேற்கொண்டார். 


ஆண்டுகள் பல செல்ல பூமிதான் சூரியனை சுற்றி வலம்வருகிறது என்னும் கருத்தில் கலிலியோக்கு அதிகப்படியான நம்பிக்கை உருவானது.ப்ளோரன்ஸ் (Florence) நகரின் அதிகாரிகள் அனுமதியுடன் 1632-ம் ஆண்டு அவர் மற்றுமொரு புத்தகத்தை வெளியிட்டார்.மறுபடியும் தேவாலயத்தை கலிலியோ அவமதிக்கிறார் என்று ரோம் நகர அதிகாரிகள் கலிலியோவை இரண்டாவது முறையாக கைது செய்தார்கள் இந்ததடவை விடுதலை என்ற பேச்சுக்கு இடமின்றி கலிலியோவை வீட்டுக்காவலில் வைத்தார்கள் அச்சமயத்தில் அவரின் வயது 68. 10 வருடங்கள் வீட்டுக்காவலில் காலம் கழித்தார் கலிலியோ.பின்பு அவர் 1642-ம் வருடம் தனது 78-வது வயதில் அவர் இவ்வுலகை விட்டு மண்ணுலகை அடைந்து விண்ணுலகை நோக்கி சென்றார். அவரின் மறைவுக்குபின்னர் அவரது புத்தகமானது ஐரோப்பா முழுவதும் வலம்வந்தது.அதன்பின்னர் இவரின் பல ஆராய்சிகளை தன்னுள் கொண்ட இப்புத்தகம் பழமைவாதிகளின் கண்களில் பட்டு அவர்களது அறிவுக்கண்களை திறந்தது.கண்ணெதிரே பார்க்கும் வரை அல்லது அறிவியலின் ,மூலமாக உறுதிபடுத்தும் வரை எவற்றையும் நம்பாத அவரின் மனம்தான் இவ்வுலகை வியக்கும் அளவு பல கண்டுபிடிப்புகளை கண்டறிய அவருக்கு துணை நின்றிருக்கிறது.கலிலியோவை இவ்வுலகம்  'வானியல் சாஸ்திரத்தின் தந்தை' என்று பெருமையுடன் அழைக்கிறது. அனைவராலும் மெய் என்று ஏற்றுகொண்டவற்றை நாமும் அவர்கள் கூறியபடியே ஏற்றுக்கொள்ள வேண்டுமென்ற அவசியம் கிடையாது. சந்தேகம் இருந்தாலும் துணிவுடன் கேட்கலாம் அதில் ஏதேனும் பிழை இருப்பினும் கூறலாம். கலிலியோவினைப்போல் போல கேள்விகள் பல தைரியமாக கேட்பதற்கு, புது மெய்மைகளைக் கண்டறிய முயல்பவர்களுக்கும், தன்னம்பிக்கையுடனும் விடாமுயற்சியுடனும் உழைப்பவர்களுக்கு உறுதியாக அவரது குறிக்கோளை அடைய இவ்வுலகம் வழிவகுக்கும்.